ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'

கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல்திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்திற்கு, தமிழக அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக, பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். அப்போது, 'எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை; ஆசிரியர்களின் பணி போதுமானதாக இல்லை' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சில தலைமை ஆசிரியர்களை எழுந்து நிற்க சொன்ன, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி எச்சரிக்கை விடுத்தார். இதை எதிர்த்து, வாக்குவாதம் செய்த தலைமை ஆசிரியர்கள், வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசிய தலைமை ஆசிரியர்கள், 22 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'சஸ்பெண்ட்?' 'சர்ச்சையில் சிக்கி உள்ள தலைமை ஆசிரியர்கள், நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்; அதில் திருப்தி இல்லையென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வுரத்து செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. maanavanai kandithu padikka vaikkum asiriyer uyer adhigariyal pazhi vaangalal17(b),suspend.result 100% kku kuraivu ental uyer adhigarigalin pazhi vaangalal 17(b),suspend.ethu nadanthalum uyer adhigarigalin torture asiriyer meethutaan.uyer athigarigalin torture karanamaga asiriyer samuthayetthilum martta thuraigalil nadappathu pontu nigalalum targoligal ingum thodarumo?

    ReplyDelete
  2. சமீபகாலமாக உயர் அதிகாரிகளின் இடையூறுகளால் கல்வித்தரம் சீரழிந்து உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி