5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2015

5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கோரிக்கை.

வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.


கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.2ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம் கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.


இதில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து கூடுதலாக100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி