மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2015

மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர்.கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் வீதம், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியும், மாத சம்பளம் ரூ.5ஆயிரமும் வழங்கப்பட்டது.தற்போது இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.7ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 71 மாணவர்களுக்கு கீழ் உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு, அவர் 101 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுவருகிறார்.இதனால் பணியிடம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி பாடங்களில் மாணவர் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 58 பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள், நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி