சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மேலும் ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2015

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மேலும் ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்றே இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை இனி படிப்படியாககுறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது,"தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆந்திராவுக்கு நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.சென்னை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அடுத்த தகவல் வரும் வரையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்றார் ரமணன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி