7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2015

7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர்

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.


இக்குகுழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை சில நாள்களுக்கு மன்பு மத்திய அரசிடம் அளித்தது.இந்நிலையில் இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய பிரதமர்அலுவலக அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவற்கு சில வரைமுறைகள் உள்ளன என்ற அமைச்சர் அவை செயல்படுத்தப்படும் போது அது குறித்து பேசலாம் என்றார்.


மேலும், பிரமதர் மோடியின் 18 மாத ஆட்சியில் மத்திய பணியாளர் நலத் துறை பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி