மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2015

மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம்

கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


'சிடெட்' தேர்வு:


தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சிடெட்' நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, சிடெட் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியாயின. 6.55 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில், 1.14 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 17.48 சதவீதம். இதில், தமிழகத்தைச் சேர்ந்தோர் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதிலும் பலர், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.


பணிச்சுமை:


இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் கூறியதாவது:கே.வி., பள்ளிகளில் ஆசிரியராக சேர, சிடெட் தேர்வில் தேர்ச்சி அவசியம்; ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப் பாடங்களை அனைத்து ஆசிரியர்களும் எடுக்க வேண்டும்; பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதேநேரம், தமிழக பட்டதாரிகளில் பலருக்கு, இந்தி தெரிவதில்லை; இந்தி தெரியாமல், கே.வி.,யில் பணியாற்றுவது மிகக் கடினம்.இந்தி மொழி தெரியாவிட்டால், 'பணியில் செயல்திறன் சரியில்லை' எனக்கூறி, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது இந்த பள்ளிகளில் சாதாரணம். மேலும், ஒழுங்கு நடவடிக்கையாக, வடமாநிலங்களுக்கு பணியிடம் மாற்றப்படுவர். இதுபோன்ற பிரச்னைகளால், மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வு போல் அல்லாமல், மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

32 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Supreme court Case wil be on 06/11/2015...

    ReplyDelete
  3. Pg trb varuma varatha any body tel me

    ReplyDelete
  4. Frds there is less chance for pg trb this year

    ReplyDelete
  5. Puli varuthu......puli varuthu...

    ReplyDelete
  6. INI ENDHA EXAMUM ILLA ... STRAIGHTA ELECTION THAN.... IDHA ENDHA VATTAARAMUM SOLLALA, ENDHA ADHIKARIYUM SOLLALA..... NANE THAN SOLREN.... UNGALAI PONRA GOVT.I NAMBI YEMANDHA SAADHARANAMANA B.ED. PATTADHARI THAN....! ADUTHA AATCHIYILAAVADHU NANMAI NADAKKA ELECTION.LA FOCUS SEIVOMAA?

    ReplyDelete
    Replies
    1. U r suggestion gives pain...but the current situation of Govt seems to be no call for for this year..........

      Delete
  7. 90 and abve tet passedku velai kidaikumb?????

    ReplyDelete
  8. RAJALINGAM SIR what about case status?

    ReplyDelete
  9. anybody tell nov case finish aguma?

    ReplyDelete
  10. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  11. Tet case that is all. Don't expect any thing good for 90 and above.

    ReplyDelete
  12. Mutual transfer BT TAMIL CHENNAI CORPORATION SCHOOL TO COIMBATORE corporation AND
    DIRST CONTACT=9942614715

    ReplyDelete
  13. 90 and above be confident.we will get job soon.

    ReplyDelete
  14. nov 6 tet case will get judgment???

    ReplyDelete
  15. NOV 6 TET CASE THIRPPU VARUMA?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி