அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறைஅறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து,விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கைஎழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.வியாழக்கிழமை மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 -விற்கு டிச.7-ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதேபோல்,சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9-ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்புகளுக்கு டிச.14-ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது.இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி