தேவையில்லாத சிபாரிசுக்கும், ஊழலுக்கும் வழிவகுப்பதாகக் கூறி மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 2016ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு பணிகளில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி, அஞ்சல்துறை ஆய்வாளர், மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப்-பி பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இருக்காது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணி உறுதியாகிவிடும்.குரூப்-பி, சி, டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வை மத்திய அரசு ரத்துசெய்திருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் குரூப்-பிசார்நிலைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வை ரத்துசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படித்து வரும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.தமிழக அரசில் சார்நிலைப் பணிகளாக கருதப்படும் நகராட்சி ஆணையர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,பேரூராட்சி நிர்வாக அதிகாரி (கிரேடு-2) போன்ற பதவிகள் குரூப்-பி பணிகளின் கீழ் வருகின்றன. இதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு (மெயின் தேர்வு) 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றிபெற நேர்காணல் மதிப்பெண் முக்கியம் என்றாலும் எந்த பணி என்பதை முடிவுசெய்வதில் அதற்குப் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு ஜனவரி முதல் நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் குரூப்-பி சார்நிலைப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்படுமா? என்று போட்டித்தேர்வுக்குப் படித்து வரும் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி