சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2015

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு.

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறிமறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.


இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும்உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால்,சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.

2 comments:

  1. முதல போய் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துங்கயா பிறகு உங்க போராட்டம் வைக்கலாம் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடுக்க எத்தன நாள் போராடுனிங்க
    தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்கனுமுனு எத்தன நாள் போராடுனிங்க
    எல்லாம் சுயநலம் நம்ம பிள்ளை தான் தனியார் பள்ளியில தானே படிக்குது நம்ம போராடுனா மத்தவங்க பிள்ளை பாடம் தானே கெடும்

    கலேக்ட்டர் ஆபிஸ் ல அதுவும் தடையை மீறி விளங்கிடும் அப்புறம் மாணவன் டீச்சரை கத்தியால குத்த தானே செய்வான் நம்ம முதல ஒழுங்க இருங்க அரசை குத்தம் சொல்லிகிட்டு இருக்கிங்க நீங்க ஓழுங்க இருந்தா தானே மாணவனும் ஒழுங்க இருப்பான்

    இத கேட்ட பக்கம் பக்கமா நாங்க ரெக்கார்டு மெயின்டன்ட் பன்னனுமுனு சொல்றிங்க உங்கட்ட இலவச பொருள்களை கொடுத்து கணக்கு எழுத சொன்ன முறையா மாணவர்களுக்கு கொடுப்பிங்கனு அரசு உங்க மீது வைத்திருக்கும் நம்பிக்கை இதை சுமையாக செய்யமா கடமையா செய்யுங்க

    சிறந்த எவ்வளவோ ஆசிரியர்கள் இருக்கிங்க அவங்க என்ன மன்னிசிருங்க தேவையில்லாம போரடும் ஆசிரியர்களை தான் சொல்றேன்

    ReplyDelete
  2. போய் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துங்கயா.... நல்ல வாசகம். படிப்பறிவில்லா மனிதன் கூட ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரும் இவ்வுலகில் மரியாதை மற்றும் மனித பண்பில்லாத உமக்கு ஆசிரியர்களைப் பற்றி பேச தகுதியில்லை....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி