தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2015

தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி

தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில், நடுவில் ஒருநாள், திங்கள் மட்டும், வேலை நாளாக இருக்கிறது.எனவே, திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்தால், வெளியூர் சென்று, பண்டிகையை கொண்டாடுவோருக்கு வசதியாக இருக்கும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கை வந்தது.


இதுகுறித்து, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அதன்படி வேலுார், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், திங்கள் மற்றும் புதன் கிழமைகள், உள்ளூர் விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை போன்ற நகரங்களில், செவ்வாய் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், புதன் கிழமை அன்று, அரசு பள்ளி ஆசிரியர்கள், பண்டிகை கால விடுப்பு எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள் கூறுகையில், 'பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுக்கு மட்டுமே, பண்டிகை கால விடுப்புக்கு அனுமதி அளிக்க முடியும். ஏனென்றால், இரண்டு பங்கு ஆசிரியர் இல்லாவிட்டால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கவேண்டிய நிலை ஏற்படும். அதேநேரம், மாணவர்கள் விடுப்பு எடுத்தால்,அதை தடுக்க முடியாது; பள்ளிக்கு விடுமுறை தான்' என்றனர்

12 comments:

  1. சீக்கிரம் லீவ் சொன்னா நல்லா இருக்கும்

    ReplyDelete
  2. சேலம் மற்றும் வேலூரில் விடுமுறை அறிவித்ததற்க்கான ஆதாரம் ஏதேனும்
    இருந்தால் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  3. விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடுவார்களா?

    ReplyDelete
  4. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐய்யா அவர்களே, விடுமுறை அறிவிப்பீர்களா

    ReplyDelete
  5. Hai.pg ku any other list varuma

    ReplyDelete
  6. Wellfar listavathu varuma? Keshav sir

    ReplyDelete
  7. Wellfar listavathu varuma? Keshav sir

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Varaathunu ungaluku eppadi therium ?
    No solringa sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி