மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2015

மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு

மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க சேலம் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


சாக்கடை கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்து வருகிறது.மேலும், ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை சேலத்தில் பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தொடர் மழையால் பள்ளி கட்டிட சுவர்கள் தண்ணீரில் நனைந்து ஈரமாக காட்சி அளிக்கிறது.மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய, நடு நிலைப்பள்ளி கட்டிங்கள் பெரும்பலானவை மோசமான நிலையில் உள்ளன.பழுதான பள்ளி கட்டிடங்களை பட்டியலிட்டு, அவற்றை சீரமைக்கும் பணி மேற்கொள்ளமாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநகர பகுதியில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழை பாதி்ப்பில் இருந்து காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் கூறும் போது, ‘‘மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் மட்டுமல்லாமல் சாலை, சாக்கடை மற்றும் மாநக ராட்சி கட்டிடங்கள் பாதிக்கப்பட் டுள்ளதா என அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி