கனமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள்; தலைமை ஆசிரியர்கள் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

கனமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள்; தலைமை ஆசிரியர்கள் முடிவு

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதன் காரணமாகபள்ளிக்கூடங்களுக்கு 19 நாட்கள் தொடர்ந்து விடுமுறைவிடப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விடுமுறைவிடப்பட்டது. மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சில நாட்கள் விடுமுறைவிடப்பட்டது.


இந்த விடுமுறையை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் வருகிற சனிக்கிழமை தோறும் பள்ளிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் சில தனியார் பள்ளிகளில் வழக்கமாக மாலை 3-45 மணிவரை தான் வகுப்புகள் நடத்தப்படும். அந்த பள்ளிகளில் ஒரு மணிநேரம் கூடுதலாக அதாவது 4-45 மணிவரை வகுப்புகள் நடத்த இருக்கிறார்கள். இது குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி