கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2015

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.


பின்னர் அடுத்த ஆண்டில் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.கல்லூரிகளில் ஷிஃப்ட்-1-இல் 1,683 பேரும், ஷிஃப்ட்-2-இல் 1,500 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஷிஃப்ட்-1-இல் பணியாற்றும் 1683 பேருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. தொடர் கோரிக்கைகளுக்குப் பின்னர், இவர்களுக்கு ஊதியம் அளிக்க தமிழக அரசு ஆணை (அரசாணை எண் 458) பிறப்பித்துள்ளது. இதன்படி, இவர்களின் 10 மாத பணிக்கான ஊதியத் தொகையாக ரூ.16.83 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியது: கௌரவ விரிவுரையாளர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. இந்தத் தொகை பண்டிகைக்கு முன்னதாக கிடைக்கும் வகையில், கல்லூரிகளுக்கு தொகையைப் பிரித்தளிக்கும் பணிகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Any infinformation about TRB for arts and science colleges?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி