நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.2005-ம் ஆண்டு கொட்டித்தீர்த்தமழைதமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழை அளவு 44 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு 48 செ.மீ., சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 79 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை பெய்த மழைஅளவு 114 செ.மீ.கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 77 செ.மீ.மழை பெய்துள்ளது.


இது சராசரி மழையைவிட 79 சதவீதம் அதிகம். அதாவது மழை கொட்டித்தீர்த்துள்ளது. 1918-ம்ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் 109 செ.மீ.மழையும், 1985-ம்ஆண்டு மீனம்பாக்கத்தில் 107 செ.மீ.மழையும் அதிக பட்சமாக பெய்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு நிலைஇப்போது தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்.


நாளை முதல் அதிகரிக்கும்


குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வரும்போது தமிழ்நாட்டில் மழையின் அளவு அதிகரிக்கும். அதாவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல்கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கேளம்பாக்கத்தில் 4 செ.மீ.மழையும், குடவாசலில் 3 செ.மீ.மழையும், காரைக்கால், மகாபலிபுரம், வலங்கைமான், சீர்காழி தலா 2 செ.மீ.மழையும், நன்னிலம், கீழ் அணைக்கட்டு, கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம்(தஞ்சைமாவட்டம்) ஆணைக்காரன் சத்திரம், தரங்கம்பாடி, திருவிடை மருதூர், நாகப்பட்டினம், பேச்சிப்பாறை, ஆடுதுறை, பாண்டவராயர் தலை தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி