விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.


விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனையை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடக்கி வைத்தார். வேலூர் வளாகத்தில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி,கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங் ஸ்பெசலைசேஷன் இன் பயோ இன்பர்மேடிக்ஸ், சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷசன்என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி,மெக்கானிக்கல், ஸ்பெசலைசேஷன் இன் எனர்ஜி, புரடக்ஷன் அண்டு இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும், சென்னை வளாகத்தில் பி.டெக், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.


அடுத்தாண்டு (2016) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இணையதள முறையில் நாட்டில் உள்ள 118 முக்கிய நகரங்கள், துபை, குவைத், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நுழைவுத் தேர்வு நடக்கிறது.விண்ணப்பங்களைப் பெற ரூ. 990 செலுத்தி தலைமை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ரூ.990 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்தாண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி