நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம்கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறைபயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி