தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி பொறியியல் மாணவர்கள் திடீர் போராட்டம்: 16, 18-ம் தேதி தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி பொறியியல் மாணவர்கள் திடீர் போராட்டம்: 16, 18-ம் தேதி தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி முதல் ஆண்டு பொறியியல் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16, 18-ம் தேதிகளில் நடப்பதாக இருந்த தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்தார்.


கனமழை காரணமாக பொறியி யல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நடத்த திட்டமிடப் பட்டிருந்த தேர்வுகளின் மறுதேதி களும் அறிவிக்கப்பட்டன. அதன் படி, முதல் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல் லூரிகளைப் போன்று உறுப்பு கல்லூரிகளுக்கும் தேர்வுகளை ஜனவரிக்கு தள்ளிவைக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.


பின்னர் அவர் கூறுகையில், “மாணவர்கள் ஒவ்வொருதேர்வுக்கும் நன்கு படிக் கும் வகையில் ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு நடத்தப்படும். அதற்கு வசதியாக 16, 18-ம் தேதி களில் நடப்பதாக இருந்ததேர்வுகள் மட்டும் ரத்துசெய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.எனினும், போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்ஐடி மாண வர்களைப் போன்று உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை ஜனவரிக்கு தள்ளிவைக்க வேண் டும் என்று தொடர்ந்து வலியுறுத் தினர். மாணவர்களின் திடீர் போராட் டத்தால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.


பொறியியல் கல்லூரிகள் இன்று திறப்பு


கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 2-வது வாரம் தொடங்கி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. (இடையில் ஒருசில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் இயங்கின) அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், தொடர் மழை விடுமுறை முடிந்து பொறியியல் கல்லூரிகள் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி