தமிழ்நாடு மின் வாரியத்தில் 1650 பணியிடங்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

தமிழ்நாடு மின் வாரியத்தில் 1650 பணியிடங்கள்...

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர்,உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது.


புதிய ஊழியர்களை, அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:


உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ஊழியர் நியமனம் முறைகேடு இல்லாமல், வெளிப்படையாக நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி,புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்.அதில், தேர்வு நடைமுறை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். வேலைக்காக, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

23 comments:

  1. what abt trb exam for engineering

    ReplyDelete
  2. My opinion that expecting trb useless....trbkke theriyathu when notification come..

    ReplyDelete
  3. Amma knows only. plz,fill all trb posting.

    ReplyDelete
  4. Those have wish to appear for trb eng and polytechnic send petition to cm cell immediately.surely we will get good message.

    ReplyDelete
  5. trb and polty trb exam after election

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி