திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்

திண்டுக்கல்லில் இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலைகுறித்தும், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.


திண்டுக்கல் - பழநி கல்வி மாவட்ட பள்ளிகளில் திண்டுக்கல் சி.இ.ஓ., சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபட்டது.அதில் 1950ல் கட்டப்பட்டு சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் 20, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன என கண்டறிய பட்டது. அவற்றை புகைப்படம் எடுத்து சேத விபரங்களை கணக்கிட்டனர். பின், பள்ளிக் குழந்தைகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கவைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடங்கள் நடத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தினர்.


முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில், 20 பள்ளிகளில் கட்டடச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. அவை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பியுள்ளோம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி