உயர் நீதிமன்றத்துக்கு டிச.23 முதல் 31 வரை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2015

உயர் நீதிமன்றத்துக்கு டிச.23 முதல் 31 வரை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு டிச.23 முதல் 31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 29-ஆம் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிச. 23 முதல் 31 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள் செயல்படுவர்.அவசர வழக்குகளுக்கான மனுக்களை 28-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.29-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரணை செய்யும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. பள்ளிகூடத்துக்கு அடுத்து உங்களுக்குத்தான் விடுமுறை அதிகம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி