3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2015

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்டஅறிக்கை:


தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


பி.பி.சி., அறிக்கை:


லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி