அரசு ஊழியர்களுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2015

அரசு ஊழியர்களுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரிக்கை

பிற மாநிலங்களை போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும்,” என சிவகங்கையில் அரசு ஊழியர் (ஓய்வு) சங்க மாநில செயலாளர் எஸ்.சுந்தன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1995 வரையிலான டி.ஏ., நிலுவை தொகை வழங்க வேண்டும். 'ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருத்துவ செலவில் 75 சதவீதம் வழங்குவோம்' என்றனர்.ஆனால், 'ஆப்பரேஷனுக்கு மட்டுமே செலவில் 30 சதவீதம் தரப்படும்' என ஓய்வூதியர் குடும்பத்தை அரசு ஏமாற்றிவிட்டது. அரசு ஊழியரிடம் 4 ஆண்டு பிடித்தம் செய்து ரூ.4 லட்சம் காப்பீடு வழங்குகின்றனர். ஓய்வூதியர்களுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே கிடைக்கிறது.


குஜராத், உத்தரபிரதேசத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 வழங்குகின்றனர். ஆனால், தமிழக அரசு வழங்குவது ரூ.3,050 தான். அதிலும் சத்துணவு ஊழியர், கிராம உதவியாளர், அங்கன்வாடி ஊழியருக்கு மாதம் வெறும் ரூ.1,000 மட்டுமே. இத்தொகையும் 4 மாதத்திற்கு ஒரு முறை தான் கிடைக்கிறது. கம்யூடேஷன் தொகை பிடித்தம் செய்யும் காலம் 15 ஆண்டாக இருப்பதை 12 ஆக குறைக்க வேண்டும்.2005க்கு முன் ஓய்வு பெறுவோருக்கு 'கிரேடு பே' 40 சதவீதம்தான். ஆனால், 2006க்கு பின் ஓய்வு பெற்றோருக்கு அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத 'கிரேடு பே' அரசு வழங்குகிறது. இதன் மூலம் 2006க்கு முன் ஓய்வு பெற்றோருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்வரை இழப்பு ஏற்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி