4 மாவட்டங்களில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங்:6 ஆயிரம் பேர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2015

4 மாவட்டங்களில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங்:6 ஆயிரம் பேர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 14–ந் தேதி பள்ளிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உளவியல் ‘கவுன்சிலிங்’ வழங்கப்படுகிறது.


குறிப்பாக 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் மன அழுத்தம், மன உளைச்சலில் இருந்து மீண்டு வர பள்ளிக்கல்வி துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் மாணவர்களை தேர்வு பயத்தில் இருந்து மீட்க ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.10 குழுக்கள் மூலம் 4 மாவட்டங்களில் நடமாடும் உளவியல் கலந்தாய்வு காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் இதுவரை மொத்தம் 26,887 மாணவ–மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு உள்ளது.10 ஆயிரத்து 653 மாணவர்களும், 16 ஆயிரத்து 234 மாணவிகளும் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.


வெள்ளத்தில் கல்வி சான்றுகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்களில் நடந்த முகாமில் 6627 மாணவர்கள் கல்வி சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.இதில் 10–ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கேட்டு 3310 பேரும், பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ் கேட்டு 1977 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.மேலும் மாற்று சான்றிதழ் (டி.சி) கேட்டு 1340 பேர் விண்ணப்பம்கொடுத்தனர். கல்வி சான்று முகாம் இந்த மாதம் இறுதி வரை நடக்கிறது. மனநல ஆலோசனை முகாம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி