வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: இன்று வங்கியில் பணம் எடுப்பது நல்லது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2015

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: இன்று வங்கியில் பணம் எடுப்பது நல்லது

வங்கிகளுக்கு நாளை மறுநாள் முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை நாட்கள்வருகிறது. இதனால், ஏடிஎம் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மாதத்தின் 2வது, 4வது சனிக்கிழமை பொது விடுமுறையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது.


அதற்கு பதிலாக மாதத்தின் முதல் மற்றும் 3 வது சனிக்கிழமை முழு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் (24ம் தேதி) மீலாது நபியும், 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. அந்த 2 நாட்களும் அரசு விடுமுறை ஆகும்.அதைத் தொடர்ந்து 26ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.


இதனால், வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை ஆகிறது.தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏடிஎம் சேவையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான பணத்தை இன்றே வங்கிக்கு சென்று எடுத்து கொள்வது நல்லது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி