டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2015

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:


குரூப்-1 பதவிகளுக்கு காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாகதிருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.


எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி