சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம்செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.
மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும்.எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை (டிச.5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த நான்கு நாள்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Dec 5, 2015
Home
kalviseithi
சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்
சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி