'கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்'. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2015

'கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்'.

'பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப வேண்டும்.


மேலும் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல், கணினி ஆகிய தொழிற்கல்வி பாடங்களுக்கான சிறப்பாசிரியர் நியமனத்தில், கணினி அறிவியல் பி.எட்., படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்; தனியார் பள்ளிகளில் இருப்பது போல், அரசு பள்ளிகளில் கணினி பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி