டைம்ஸ் உயர்கல்வி பட்டியலில் இந்தியாவில் சிறந்த தனியார் பல்கலைக்கழகமாக அமிர்தா பல்கலைக்கழகம் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2015

டைம்ஸ் உயர்கல்வி பட்டியலில் இந்தியாவில் சிறந்த தனியார் பல்கலைக்கழகமாக அமிர்தா பல்கலைக்கழகம் தேர்வு

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள டைம்ஸ் உயர்கல்வி பட்டியலில் முதல் 200 பல்கலைகழகங்களுள் அமிர்தா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளதுஇந்த ஆண்டு அமிர்தா பல்கலைக்கழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக இப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.


ஒரே ஆண்டில் மூன்று வெவ்வேறு தரவரிசைப்பட்டியலில் வேறு எந்த இந்திய தனியார் பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், 7 ஐஐடிக்கள், தில்லி பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகம் போன்ற பல பிரபல கல்விநிறுவனங்கள்ளும் இடம்பிடித்திருக்கின்றன.ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்தபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தைவான், துருக்கி,சிலி மற்றும் கொல்பியா போன்ற நாடுகளைச்சேர்ந்த சிறந்த 200 பல்கலைக்கழகங்களுள் அமிர்தா பல்கலைக்கழகம், ஒட்டுமொத்த அளவில் 181-வது இடத்தில் இருக்கிறது.அமிர்தா விஷ்வா வித்யபீடம் (அமிர்தா பல்கலைக்கழகம்)-ன் துணைவேந்தரான டாக்டர். பி. வெங்கட் ரங்கன் பேசுகையில், ‘‘பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதன்மையான 200 சிறந்த பல்கலைக்கழகங்களுள் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய தனியார் பல்கலைக்கழகமாக இருப்பது எங்களுக்கு பெருமையும் ஊக்கமும் அளிக்கும் மாபெரும் உந்துசக்தியாக இருக்கிறது.

அமிர்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு 12 ஆண்டுகளுக்குள்ளேயே இச்சாதனை எட்டப்பட்டிருப்பது, எமது வேந்தரான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயிதேவி அவர்களது தலைமைப்பண்பு மற்றும் தொலைநோக்குப்பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. என்று கூறினார்.இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 3-வது ஆண்டாக அமிர்தா பல்கலைக்கழகம் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி