மாற்று குறையாத தங்கங்கள்: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2015

மாற்று குறையாத தங்கங்கள்: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ல் இருந்து டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


எத்தனை பேர்உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள 90 சதவீத மாற்றுத்திறனாளி குழந்தைகள்பள்ளிக்கு செல்வதில்லை என 'யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.வசதிகள் தேவைமேலை நாடுகளில் ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத்திறனாளிகளாக கருதுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால்இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான பாதிப்பை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் குறைவு. பஸ், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை. இங்கு மாற்றுதிறனாளிகளை வேலைக்கு எடுக்கவும் சில நிறுவனங்கள் தயங்குகின்றன.மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி