இனி ஒரு விதி செய்வோம்..
மனிதவளத்தை ஒன்றுதிரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..
தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளேன்..
அதில் தன்னார்வம் உள்ள தோழர்கள் தங்களின்
பெயர்,
பணி& பதவி,
மாவட்டம்,
வீட்டு முகவரி ,
அலுவலக முகவரி,
தொலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரி
போன்ற முழு விபரங்களையும் தெளிவாக குறிப்பிடவும்.
நான் தஞ்சை மாவட்டத்தின் பேரிடர் மீட்புக் குழுவில் உள்ளேன்..
இந்தக் குழுவில் உள்ள தன்னார்வலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் இந்தியன் ரெட் கிராஸ் மூலம் முதல் உதவி பயிற்சிகள், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்கி அவர்களைக் கொண்டு அவர்களின் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்..
பணியில் உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்ல முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து அனுமதியும் பெற்றுத்தரப்படும்.
தன்னார்வலர்கள் மீட்புப் பணியிலோ, நிவாரணப் பணியிலோ நேரடியாக ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்தியன் ரெட் கிராஸின் மூலம் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினருக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்படும். எனவே அவர்கள் சேவை செய்ய உலக நாடுகள் அனைத்திலும் தனி அங்கீகாரம் உண்டு..
Disaster Response Team Member மீட்புப் பணிகளிள் ஈடுபட தடை ஏதும் இல்லை..
முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகவே கருதுகிறேன்..
கல்வி சார் வலைதளங்களின் உதவி கொண்டு இந்த முயற்சியை வெற்றியடையச் செய்திடுவோம்..
கல்வி சார் வலைதளங்களின் உதவியுடன் பேரிடர் மீட்புக் குழுவில் (Disaster Response Team) இணைவதற்கான விண்ணப்பங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தன்னார்வலர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் முயற்சி என்பதால் தனி ஒரு வலைதளத்தின் பெயரில் இல்லாமல்.. அதாவது குறுகிய வட்டத்தில் நின்றுவிடாமல், அனைத்து வலைதளங்களிலும் ஒரே பெயரில் குழுவினை ஆரம்பித்து அவர்களை ஒன்றினைப்போம்..
இந்த பொது சேவை முயற்சிக்கு கல்வி செய்திகள் வலைதளம் ஒப்புதலைத் தெரிவித்துள்ளது..
விருப்பம் உள்ள வலைதள நிர்வாகிகள் தொடர்புகொள்ளவும்.
இந்தக் குழுவினை வெற்றியடையச் செய்து பேரிடரிலிருந்து மக்களை மீட்போம்..
குழுவின் link விரைவில் வெளியிடப்படும்,
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
-இவண்
தேவராஜன்,
Cell- 9994101709
பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர்.
தஞ்சாவூர் ரெட் கிராஸ்
Good. Willing to join. My mail I'd kumararajasekar@gmail.com
ReplyDelete