சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2015

சென்னையில் பள்ளிகளை திறப்பது எப்போது?- அரசிடம் நீடிக்கிறது குழப்பம்

சீரமைப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்வதால் சென்னையில் வரும் 13-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடியிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். ஆனால், 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தாவது:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பள்ளிகளில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மறு குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர், பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.


பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில் அப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.அதுமட்டுமல்லாது, மழை வெள்ளத்தில் பள்ளிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கூடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.அந்த முகாம்களில் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.சுத்தப்படுத்தும் பணி துவங்காததாலும், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாலும் 13-ம் தேதிக்கு பிறகும்கூட பள்ளிக்கூடம் திறப்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி