வெள்ளப் பாதிப்பு: மறுசான்றிதழ் வழங்க சென்னை பல்கலை. ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2015

வெள்ளப் பாதிப்பு: மறுசான்றிதழ் வழங்க சென்னை பல்கலை. ஏற்பாடு

வெள்ளப் பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் வெளியிட்ட அறிவிப்பு:வெள்ளப் பாதிப்பில் பலர் தங்களுடைய பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், கட்டணம் இன்றி உரிய சான்றிதழ்கள் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


இதற்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் சான்றிதழைத் தவறவிட்டத்தற்கான காவல் துறை சான்றிதழ், நகர்மன்ற உறுப்பினர் அல்லது வட்டாட்சியரின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தால் போதுமானது. அவர்களுக்கு உடனடியாக மறு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி