கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2015

கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில்,


"கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


இதேபோல் ஆளுநர் ரோசய்யா தனது வாழ்த்துச் செய்தியில், "தமிழகம், ஆந்திரா, தெலங்கான ஆகிய மாநிலங்களில் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்து பிறந்த நன்நாளில் சகோதரத்துவத்தை பேண உறுதியேற்போம்" எனக் கூறியுள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், "அன்பு, கருணை மற்றும் சகிப்புத் தன்மையின் அடையாளமான இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, " பகையும் வெறுப்பும் வளர்ந்து, கொலைகளும், படுகொலைகளும், பஞ்சமா பாதகங்களும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், இயேசுவின் மனிதநேய அமுத மொழிகள் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவையாகும்" என தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி