ஆட்டநாயகன் விருதை சென்னை மக்களுக்கு அர்ப்பணித்த ரகானே - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

ஆட்டநாயகன் விருதை சென்னை மக்களுக்கு அர்ப்பணித்த ரகானே

புதுடெல்லி, டிச. 7-இந்தியா– தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.


இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய ரகானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டு பேசிய ரகானே “இந்த விருதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முடிவுடன்தான் களமிறங்கினேன். ஒவ்வொரு நாளும் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்கிறேன். நான் என்னை தயார்படுத்திக்கொள்வதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அப்படி செய்யும் போது அதற்கான பலன்கள் நம்மை பின் தொடரும்” என தெரிவித்தார்.4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி