மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2015

மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு மாணவன் கையில் இருந்த, 'காம்பஸ்' கருவி, இந்த மாணவன் இடது கண்ணில், தவறுதலாக குத்தி விட்டது.


இதில், பார்வை பாதிக்கப்பட்ட மாணவன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.மாணவனின் தந்தை, போலீசில் புகார் செய்தார். பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி