ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2015

ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது.

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,)சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ரூ.7500 மதிப்பிலான புத்தகங்களின்உண்மை மதிப்பு ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆறு முதல் 9ம் வகுப்பு வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் பள்ளி மானியமாக வழங்கப்படுகிறது.


இதில், பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7500க்கு புத்தகங்கள் வாங்க அத்திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும், பல நிறுவனங்கள் பெயரில், 32 புத்தகங்கள் கொண்ட கட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடன் ரூ.7500க்கானகொட்டேஷன், ரசீதும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இப்புத்தக மொத்த மதிப்பே ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது. தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆண்டுதோறும் பள்ளி நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விவரத்தை அதிகாரி களுக்கு அனுப்புகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் புத்தகங்களை தான் நாங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. புத்தகங்களுடன் தான் கொட்டேஷன், ரசீதும்அனுப்புகின்றனர். இவற்றில், குறைந்த பக்கமுள்ள ஐந்து வகை காமிக்ஸ் புத்தகம் விலை தலா ரூ.550 என குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியல் பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.150க்குள் தான் உள்ளது. இவற்றால் மாணவர் களுக்கு பயன் இல்லை, என்றனர். தமிழ்- 2 ஆங்கிலம் - 30 :பள்ளிகளுக்கு வந்துள்ள 32ல், 30 புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆங்கில புத்தகங்கள். சமச்சீர் கல்வி முறை அமல்படுத்துவதற்கு முன் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே இந்த ஆண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி