லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2015

லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை

டி.என்.பாளையம், டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, டி.என்.பாளையம் ஒன்றியம், பங்களாப்புதுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.


பள்ளியில், 950-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், கிராமப்புறங்களை சேர்ந்த பின் தங்கிய மாணவர்கள் அதிகம்.மாணவர் வருகை பதிவேடு கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர். அவ்வாறு வரும் பெற்றோரில், பல ஆண்கள் லுங்கி, அரைக்கால் டவுசரும்,பெண்கள் நைட்டி அணிந்தும் வருகின்றனர். மேலும், பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்துக்கு, ஒரு சில கிராமப்புற பெற்றோர், சட்டை அணியாமல் வருகின்றனர்.இந்நிலையில், கிராமப்புற மாணவர்களோடு சேர்த்து, பெற்றோரையும் திருத்த அரசுப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, 'பள்ளிக்கு வரும் பெற்றோர் வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து தான் வரவேண்டும்' என்பதை அறிவுறுத்தி, பள்ளிக்கூட நுழைவு வாயிலில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி