தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2015

தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும்!

'குமரி முனையில் மையம் கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:


வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, தற்போது, இலங்கை மற்றும் குமரி முனையில்மையம் கொண்டு உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன்காணப்படும்; சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு, விட்டு பெய்யலாம். நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம், நன்னிலம், விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் - 10; கடலுார் மாவட்டம், பண்ருட்டி - 9; காஞ்சிபுரம், மாவட்டம், செய்யூர் - 6; சென்னை டி.ஜி.பி., அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி