கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..

வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.மழையில் சான்றிதழ்களை இழந்தோருக்கு, மறுபிரதி வழங்கும் முகாம்கள் நேற்று துவங்கின. உயர்கல்வித் துறைக்கான முகாமை, சென்னை, எழும்பூர் காயிதே மில்லத் கல்லுாரியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா ஆகியோர், கல்லுாரி விடுதி, நுாலகம், கணினிஆய்வகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.


அப்போது, செயலர் அபூர்வா கூறும்போது, ''விண்ணப்பம் அளித்தோருக்கு, ஒரு வாரத்தில், மறுபிரதி சான்றிதழ் வழங்கப்படும். வெள்ளத்தால், கல்லுாரிகள் சேதமடைந்ததை ஆய்வு செய்யவும், கட்டடங்களின் உறுதித் தன்மையை சோதிக்கவும், குழு அமைக்கப்படும்,'' என்றார்.வெள்ளத்தால் சேதமடைந்த, காயிதே மில்லத் கல்லுாரி, கணினி ஆய்வகத்தை சீரமைக்க,10 லட்சம் ரூபாய் வழங்குவதாக, அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி