இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதல்வர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2015

இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம் 12ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,


தமிழகத்தில் பெய்தகன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை கேட்டுக் கொண்டேன்.அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தருவதாக தெரிவித்துள்ளன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களை 12.12.2015 முதல் 21.12.2015 வரை 10 நாட்களுக்கு இந்த நிறுவனங்கள் நடத்தும்.


இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும். இந்தச் சேவை முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.மழை வெள்ளம் காரணமாக பழுதடைந்த இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும்ஆட்டோ உரிமையாளர்கள்/ ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி சீர் செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி