விஏஓ பதவி உயர்வு விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2015

விஏஓ பதவி உயர்வு விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை

வருவாய்த் துறையில் கிராம நிர் வாக அலுவலர்களுக்கு பயிற்சிக் காலம் முடிந்ததும் பதவி உயர்வு வழங்கக் கோரிய மனுவை பரி சீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சி. சதீஷ்குமார் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,


‘‘கிராம நிர்வாக அலுவலர்களை தவிர்த்து, பிற பதவிகளில் உள்ளவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக் காலம் (தகுதி காண் பருவம்) முடிந்ததும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சிக் காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகே பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

பதவி உயர்வில் வருவாய்த் துறையில் ஆரம்பக் கட்டப் பணி யில் உள்ள பணியாளர்கள் மத்தியில் கடைபிடிக்கப்படும் வேறு பாட்டை அகற்றி, மற்ற பணியாளர் கள் போல கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பயிற்சிக் காலம் முடிந்ததும் பதவி உயர்வு வழங்கக்கோரி, வருவாய்த் துறை முதன்மைச் செயலருக்கு 29.9.2015-ல் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந் தாமன் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான மனு தார ரின்மனுவை, தமிழக அரசு 2 வாரத்தில் சட்டப்படி பரிசீலித்து உரிய ஆணையை பிறப்பிக்க வேண் டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி