வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், டிசம்பர், 28க்கு தள்ளிவைக்கப்பட்டன.


'மற்ற கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும்' என, உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், 'பெஞ்ச்' முன் ஆஜரான, 'அப்துல் கலாம் விஷன் இந்தியா' அறக் கட்டளை அறங்காவலர் குமார், 'பிற மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்' என, முறையிட்டார். அண்ணா பல்லை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.அதையடுத்து, 'தமிழகம் முழுவதும் தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி