பள்ளி வயது வளர் இளம் பெண்கள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்?மருத்துவர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2015

பள்ளி வயது வளர் இளம் பெண்கள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்?மருத்துவர் அறிவுரை

தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவிகளுடன் மருத்துவர் பார்கவி மணிவண்ணன் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை 7ம் வகுப்பு மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .செவிலியர் சங்கீதா முன்னிலை வகித்தார்.


மருத்துவர்பார்கவி மணிவண்ணன்வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்தும் ,அது வருவதற்கான காரணம் என்ன?அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி மூன்று நாட்கள் என்கிற தலைப்பில் விளக்கி கூறினார்.பொதுவாகவே காய்கறி ,பேரிச்சம்பழம் ,பால் போன்றவை தினசரி உணவில் சாப்பிட வேண்டும் என்றார்.இரத்த கொதிப்பு,சர்க்கரை போன்றவை முப்பது வயதில் வந்து விடுகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக30 வயதிலியே அவசியம் பரிசோதிக்க வேண்டும்.பள்ளி வயது பெண்குழந்தைகள் எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.மாதவிடாய் காலத்தில் தன சுத்தம் பேணுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக படங்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்களின் மாதவிடாய் காலங்களில் சில வீடுகளில் வீட்டிலிருந்து வீட்டின் வெளியே ஒரு மூளையில் தள்ளி வைப்பது நடைபெறுவதை ஊடகங்களின் வழியாக அறிந்ததாகவும்,அது தவறான நடைமுறை என்றும் அதற்கான விளக்கங்களை கூறினார்.மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறுவது என்றும்,இதற்காக வீட்டிலிருந்து தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.இரத்தபோக்கு தொடர்ந்து 6நாட்களுக்கு மேல் இருந்தால்உடன் மருத்துவரை அணுகுமாறும் அறிவுரை வழங்கினார்.

அசைவ உணவை உண்ணுதலைப் பெரும்பாலும் தவிர்த்தல் நல்லது.எந்த உணவையும் அதிகமாக எண்ணெயில் பொரித்து உண்ணுதல் கூடாது.மீன் உணவு நல்லது.முட்டையில் மஞ்சள் கருவை 30 வயது முதல் தவிர்த்தல் நல்லது.செவிலியர் சங்கீதா மழைகால தொற்று நோய்கள் தொடர்பாக தெளிவாக எடுத்து கூறினார்.தினசரி மாணவர்களின் உடல் சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்தும் எடுத்து கூறினார். மாணவிகள் பரமேஸ்வரி, தனம்,தனலெட்சுமி ,கார்த்திகா உட்பட மாணவிகளின்பெற்றோரும் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.மாணவிகள் கேள்வி கேட்கும்பொழுது பெற்றோர்களும் உடன் இருந்தனர்.ஆசிரியை செல்வ மீனாள்மாணவிகளின் கேள்விகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவி முத்தழகி நன்றி கூறினார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்த மருத்துவர்பார்கவி மணிவண்ணன்உடன் பள்ளி மாணவிகள் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

மாணவிகளின் கேள்விகளும் , அதற்கான மருத்துவரின் பதில்களும்மாணவி பரமேஸ்வரி தொற்றா நோய் வரக்காரணம் என்ன? என கேட்டார் .உணவு முறையே முக்கிய காரணம் .அந்தகாலத்தில் விவசாயம் செய்தார்கள்.குழந்தைகள் ஓடி,ஆடி விளையாடினர்.ஆனால் ,உணவு முறைகள் மாறிவிட்டன.பாஸ்ட் பூட்,ச்னக்க்ஸ் அதிகம் சாப்பிடுதல் இவற்றால் கொழுப்புகள் இரத்தக் குழாயில் போய் படிந்து விடுகிறது.இப்படி பல காரணங்களால் தொற்றா நோய் வருகிறது என்றார்.மாணவி தனம் குடல் வால் இறக்கம் எதனால் ஏற்படுகிறது? என்று கேட்டார் .அதற்கு மருத்துவர் நொறுக்கு தீனி அடிக்கடி சாப்பிடுவதால் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.அது புண்ணாகி வளர்ந்து விடும்.இது இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும் என்றார்.

மாணவி தனலெட்சுமி புகை பிடித்தலால் மட்டும்தான் புற்று நோய் வருகிறதா? என வினவினார் .அதற்கு மருத்துவர் புகை பிடித்தலால் நுரையீரல் புற்று நோய் வருகிறது.புற்று நோய் மார்பு,முளை,எலும்பு ,பல் என உடலில் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.மார்பக புற்று நோய் ,கர்ப்பப்பை புற்று நோய் போன்றவை முன்னோர்கள் யாருக்காவது இருந்தால் வரலாம்,வராமலும் இருக்கலாம்.உணவுமுறைகள் எடுத்து கொள்வதில்தான் இருக்கிறது என்றார்.தைராய்டு தொடர்பாக மாணவி கார்த்திகா கேள்வி கேட்டார்.அதற்கு மருத்துவர் ,தைராய்டு நோய் அல்ல .அது குணமாகி விடும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி