பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது

வெள்ளம் பாதிப்புக்கு பிறகு கடந்த 14–ந்தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுசெயல்படுகின்றன.4 சனிக்கிழமைகள் மற்றும் 24 வேலை நாட்கள் என மொத்தம் 28 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரையாண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கவலையுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.


மார்ச் முதல் வாரத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வும், இறுதியில் 10–ம் வகுப்பு தேர்வும் வழக்கமாக தொடங்கும் என்பதால் மிகவும் குறைவான நாட்களே இருப்பதால் அனைத்து பள்ளிகளும் வகுப்பு நேரங்களை அதிகரித்து சிறப்பு வகுப்புகள் நடத்தியும் விடுமுறை நாட்களை ஈடுசெய்து கொள்ளலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் சனிக்கிழமைகளிலும் தேவையானால் அந்தந்த பள்ளிதலைமை ஆசிரியர் விருப்பத்தின்படி பள்ளிகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளும் வர இருக்கின்றன. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறாத நிலையில் ஏற்கனவே அதிக விடுமுறைகள் விடப்பட்டு இருப்பதால் தனியார் பள்ளிகள் மேலும் உள்ள விடுமுறை நாட்களை குறைக்க முடிவு செய்துள்ளன.வழக்கமாக விடப்படும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களை குறைத்து அந்த நாட்களில் பள்ளிகளை திறக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.


வருகிற 24–ந்தேதி மிலாடி நபி அரசு விடுமுறையாகும். மறுநாள் (25–ந்தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை. அதனால்23–ந் தேதிவரை அனைத்து பள்ளிகளும் செயல்படும். அதன் பின்னர் 24–ந்தேதி முதல் 27–ந்தேதிவரை 5 நாட்கள் மட்டும் தொடர் விடுமுறை அளிக்கவும் அதனை தொடர்ந்து 28–ந்தேதி மீண்டும் பள்ளிகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மாநில கல்வி ஆலோசகரும் கொளத்தூர் எவர்வின் பள்ளி குழுமங்களின் தலைவருமான புருஷோத்தமன் கூறியதாவது:–பெரும் வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அரையாண்டு தேர்வைநடத்துவது மாணவர்களை கொடுமைப்படுத்தும் செயலாகும்.வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிய மாணவ– மாணவிகளின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும். வீடு, பொருட்களை இழந்து தவிக்கும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிக மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.இத்தருணத்தில் அரசு எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட்டு பள்ளிகளை நடத்துவதுதான் முறையாகும். தன்னிச்சையாக தேர்வுகள் நடத்துவது ஏதோ கடமைக்கான செயலே தவிர இதனால் மாணவர்களுக்கு ஒரு பயனும் ஏற்படபோவது இல்லை. படிப்பதற்கு காலஅவகாசம் கொடுத்து தேர்வை நடத்தினால்தான் அது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் அதை மறந்து சிலர் அரையாண்டு தேர்வை அவசர அவசரமாக நடத்தி முடித்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை குறைத்து பள்ளிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். அதனால் மிலாடி நபி, கிறிஸ்துமஸ், பண்டிகைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவும் அதன் பிறகு 28–ந்தேதி வகுப்புகள் தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம்.31–ந்தேதி வரை பள்ளிகள் நடத்தவும் பின்னர் புத்தாண்டு (1–ந்தேதி) விடுமுறை விடப்பட்டு 2–ந்தேதி (சனிக்கிழமை) வகுப்புகள் வைக்கவும் முடிவு செய்துள்ளோம். அரசு அறிவித்திருக்கும் நாளில் அரையாண்டு தேர்வை நடத்தி அதன் பிறகு முழு ஆண்டு தேர்வுக்கு தயார் படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி