அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் வாங்ககூட காசு தராத கர்நாடக அரசு! விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2015

அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் வாங்ககூட காசு தராத கர்நாடக அரசு! விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் திட்டம்

சாக்பீஸ் வாங்க கூட பணம் ஒதுக்காத கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூன்று நாள் முழுவதுமாக அடைத்து போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுபற்றி கர்நாடக மாநில ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் பசவராஜ் குரிகர் கூறியதாவது:


கர்நாடகத்தில் 46 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. வருடாந்திர பராமரிப்பு செலவுக்காக பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ஒதுக்கப்படுவது வழக்கம். இதுபோக ஆரம்ப பள்ளிகள் எனில் ரூ.7 ஆயிரமும், ஆரம்ப பள்ளிகளுக்கு முந்தைய வகுப்புகள் கொண்ட பள்ளிகள் எனில் ரூ.5 ஆயிரமும் கூடுதலாக ஒதுக்கப்படும். இது அடிப்படை மானியம் என அழைக்கப்படும்.வருடந்தோறும், பள்ளிகளின் கல்வியாண்டு ஆரம்பிக்கும் ஜூன் மாதத்தில், இந்த நிதி ஒதுக்கப்படும். ஆனால், இவ்வாண்டு இதுவரை நிதியை கர்நாடக அரசு ஒதுக்கவில்லை. எனவே சாக்பீஸ் வாங்கவும் பணமின்றி, ஆசிரியர்களே சாக்பீஸ் வாங்கி வந்து பாடம் நடத்துகிறார்கள். எனவே, ஜனவரி மாதத்தில், 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் ஆலோசித்து தேதியை முடிவு செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி