இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.
'நெட்' தேர்வில் பங்கேற்க உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: வட இந்தியாவில் நடந்த தேர்வு குளறுபடிகளை தவிர்க்கவே, யு.ஜி.சி., இந்த விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது.
தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய 14 நடைமுறைகள் குறித்து டிச.,15ல் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளும்படி விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்தந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு அறை அனுமதி சீட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறை பேனா, பென்சில், போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. இம்முறை அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை, என்றனர்.---
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி