ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணி: மீதமுள்ள பணியிடங்களுக்கு வழக்கின் தீர்ப்பாணை பெற்ற பிறகே செயல்படுத்த இயலும்-CM Cell - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணி: மீதமுள்ள பணியிடங்களுக்கு வழக்கின் தீர்ப்பாணை பெற்ற பிறகே செயல்படுத்த இயலும்-CM Cell

கோரிக்கை நிலவரம்

பெயர் S.SARAVANAN

கோரிக்கை எண் 2015/854545/S

*கோரிக்கைத் தேதி 2*/11/2015

முகவரி CUDDALORE - 606001.TAMILNADU .

கோரிக்கை

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடுதொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோரிக்கை வகை: EMPLOYMENT - REGULAREMPLOYMENT


கோரிக்கை நிலவரம்: Rejected

தொடர்புடைய அலுவலர்: SCHOOL EDUCATION -SECY,TEACH.REC., BOARD


பதில்: நிராகரிக்கப்படுகிறது.

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015


தகவலேற்றல் மற்றும் பராமரிப்பு முதலமைச்சரின் தனிப் பிரிவுவடிவமைப்பு மற்றும் ஆக்கம் தேசிய தகவலியல் மையம், சென்னை

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி