100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2016

100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.


கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

3 comments:

  1. Oru pakkam thavarana appointment koduthu jobla irukanga but nanga nermaiyana rootla above 90 eduthavanga job illanu poradurom.engala nenaichi parunga

    ReplyDelete
  2. உண்மையாக ,நேர்மையாக படித்தவர்கள் காத்து கொண்டிருக்க இப்படிப்பட்ட போலி புறம்போக்குகளை இப்போதாவது அரசு கண்டுபிடித்ததே சந்தோசம்.இதைப்போலவே அனைத்து கல்லுரி உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்கவேண்டும்.அரசு உதவிபெறும் பல கல்லூரிகளில் பல கைநாட்டுகள் இருப்பதாக சந்தேகம் உள்ளது.எந்த தகுதியும் இல்லாதவர்கள் பலபேர் இருக்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி