1,144 உதவி பேராசிரியர் பணியிடம் 'நெட்' தேர்வர்கள் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2016

1,144 உதவி பேராசிரியர் பணியிடம் 'நெட்' தேர்வர்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் காலியாக உள்ள 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆராய்ச்சி மற்றும் 'நெட்' தேர்வில் தேர்வானவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் 76 அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன.


இதில், 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை பல்கலைக்கழக மானியக்குழுவால் (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வு (நெட்) நடத்தப்படுகிறது. அந்த தேர்விலும் வெற்றிபெற்று ஏராளமானவர்கள் பணி கிடைக்கப்படாமல் உள்ளனர்.கடந்த 2015 செப்., 25ல் சட்டசபையில் 110 விதியின் கீழ், தமிழகத்தில் 1,144 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்தார்.


இந்த அறிவிப்பின் படி காலியாக உள்ள 1,144 உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முன் வர வேண்டும் என ஆராய்ச்சிபடிப்பு முடித்தவர்களும், எம்.பில்., முடித்து 'நெட்' தேர்வில் தகுதி பெற்றவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.'நெட்' தேர்வில் வெற்றி உதவி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில்,சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு அறிவிக்கப்பட்டு 4 மாதகாலம் முடிந்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.அரசு பணியிடங்களை நிரப்ப முன் வர வேண்டும், என்றனர்.

5 comments:

  1. 110 விதி எல்லாம் ஏமாற்று வேலை.இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன.எப்படி சாத்தியம் ஆகும்???

    ReplyDelete
  2. Correct...expecting exam is useless...

    ReplyDelete
  3. Next time amma varunpoithu fill up pannuvanga...

    ReplyDelete
  4. We are expecting Trb call for to ARTS AND SCIENCE COLLEGES.

    ReplyDelete
  5. We are expecting Trb call for to ARTS AND SCIENCE COLLEGES.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி