சென்னையில் பிப்ரவரி 14-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2016

சென்னையில் பிப்ரவரி 14-ல் மருத்துவ நுழைவுத் தேர்வு

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ, 6 ஆண்டு கொண்ட எம்சிஎச் படிப்புகளுக்கு 1,200 இடங்கள் உள்ளன.


இவற்றில் 600 இடங்கள் (50 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 600 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த 600 இடங்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி